தேர் வெள்ளோட்டத்தையொட்டி கண்ணப்பாடி மகா மாரியம்மன் வீதியுலா

 

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா கண்ணப்பாடி கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம் முன்னிட்டு மாரியம்மன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கண்ணப்பாடி கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம் முன்னிட்டு இரவில் மாரியம்மன் சுவாமி மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவின்போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கண்ணப்பாடி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

The post தேர் வெள்ளோட்டத்தையொட்டி கண்ணப்பாடி மகா மாரியம்மன் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: