ஜூனில் சிபிஎஸ்இ தேர்வு முடிவு?

சென்னை: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் மாணவர்கள் 76 பாடங்களில் தேர்வு எழுதினர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரை 115 பாடங்களுக்கு நடந்தது. மேற்கண்ட இரண்டு வகுப்புகளின் தேர்வுகளில் நாடு முழுவதும் 38 லட்சத்து 83 ஆயிரத்து 770 பேர் எழுதினர்.

அவர்களில் 21 லட்சத்து 86 ஆயிரத்து 940 பேர் பத்தாம் வகுப்பிலும், 16 லட்சத்து 96 ஆயிரத்து 770 பேர் 12ம் வகுப்பிலும் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. மே முதல் வாரம் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ள நிலையில், விடைத்தாள் திருத்தி முடிக்கும் பணிகள் குறிப்பிட்ட நாளில் முடிக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஜூன் முதல் வாரம் வெளியிடவும் ஆலோசித்து வருகிறது. தேர்வு முடிவுகள் அனைத்தும் ஆன்லைனில் வெளியாகும்.

The post ஜூனில் சிபிஎஸ்இ தேர்வு முடிவு? appeared first on Dinakaran.

Related Stories: