வழிப்பறியை தடுத்த வாலிபருக்கு சரமாரி வெட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (22). இவர், நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு கே.பி.பார்க் ஹவுசிங் போர்டு வழியாக சென்றபோது அங்கிருந்த 4 பேர், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் பேக்கை பறிக்க முயன்றனர். ராஜேஷ் அதனைத் தடுத்து அந்த பேக்கை உரியவரிடம் வாங்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு புளியந்தோப்பு சுந்தரபுரம் 2வது தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு ராஜேஷ் சென்றபோது அங்கு வந்த அந்த 4 பேரும் கத்தியால் சரமாரியாக ராஜேஷை வெட்டினர். படுகாயமடைந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணையில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இமான் (20) என்பவரை கைது செய்த போலீசார், மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

The post வழிப்பறியை தடுத்த வாலிபருக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: