சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் 10 கோடி டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயம்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேட்டி

சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகங்களில் இருந்து நடப்பாண்டில் 10 கோடி டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில், ரூ.156 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது, சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவல், துணைத் தலைவர் விஸ்வநாதன் உடன் இருந்தனர்.

இதன் பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறியதாவது:
சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகங்கள் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்துவதற்கான 4 திட்டங்களை ரூ.156 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்த புதிய திட்டங்கள் மூலமாக சென்னை துறைமுகம் 10 லட்சம் டன் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் இருந்து 60 லட்சம் டன் வரை சரக்குகள் கூடுதலாக கையாள முடியும். மேலும், நடப்பு நிதியாண்டில், 10 கோடி டன் சரக்கு கையாளுவதற்கு இரண்டு துறைமுகங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சரக்கு கையாளுவது என்பது 9.2 கோடி டன்களாக உள்ளன.

சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகங்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. துறைமுகங்கள், ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் மாற்றத்தக்க நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை தவிர, துறைமுகங்களின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் வகையில், தரம் உயர்த்துதல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் துறைமுகங்கள் சரக்கு கையாள்வதை வெற்றிகரமாக செய்து வருகின்றன. குறிப்பாக, 2014ம் ஆண்டுக்கு முன்பு ரூ.80 கோடி டன்கள் வரை கையாளப்பட்டிருந்தன. ஆனால், இன்றைய நிலையில் இது, 1,650 டன்களாக உயர்ந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில், ரூ350 கோடி செலவில்

அமைக்கப்பட்டு வரும், பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா 2025ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும். மேலும், சென்னை துறைமுகம் கிழக்கு கடற்கரையின், கப்பல் சுற்றுலா மையமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் 10 கோடி டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயம்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: