மாயனூர் காவிரி கதவணை தேசிய பேரிடர் மீட்பு படை குழு நேரில் ஆய்வு

கிருஷ்ணராயபுரம், ஏப்.23: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையை தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் நேரில் பார்வையிட்டனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் 1.05 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
அணையில் இருந்து 98 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரி மற்றும் கொள்ளிடம் மூலமாக திருச்சி, முக்கொம்பு, கல்லணை சென்றடைகிறது. அங்கிருந்து தஞ்சா
வூர், புதுக்கோட்டை,அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு சென்றடைந்து பூம்புகாரில் கடலில் தண்ணீர் கலக்கிறது.
மேலும் மாயனூர் காவிரி கதவணையில் இருந்து 4 பாசன வாய்க்கால் மூலமாக திறந்து விடும் கண்ணீர் ஆனது பல ஆயிரம் கணக்கான விவசாய நிலங்களுக்கு பாய்வதால் இதன் மூலம் விவசாயங்கள் செழிப்பாக நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஜனவரி மாதம் தண்ணீர் அடைப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். மாயனூர் காவிரி கதவனை பகுதியில் வெள்ளப்பெருக்கு மற்றும் ஆபத்து காலங்களில் மேற்கொள்ள பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் காவல் ஆய்வாளர் சுபோத் டாங்கே தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாயனூர் காவிரி கதவணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், விஏஓ.மாலதி, மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post மாயனூர் காவிரி கதவணை தேசிய பேரிடர் மீட்பு படை குழு நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: