அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கம் விலை மாற்றப்படும் நிலையில், இன்று காலை 7.30 மணிக்கே தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை தொடங்கியது

தங்கத்தின் விற்பனையை அதிகரிக்க நகைக்கடைகளை முன்கூட்டியே திறந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் 45 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 குறைந்து 45 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால் தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: