சேலம் பெரியார் பல்கலையில் ஒலிம்பியார்டு நுழைவுத்தேர்வு

 

ஓமலூர், ஏப்.22: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியார்டு நுழைவுத் தேர்வு, புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் இந்திய புவி அறிவியல் கூட்டமைப்பு சார்பில், பெரியார் பல்கலைக்கழகத்தில் மே மாதம் 20ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் 25 மாணவ, மாணவிகளுக்கு 15 நாட்கள் மெய்நிகர் வாயிலாக விர்ச்சுவல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதில் இருந்து தேர்வு செய்யப்படும் சிறந்த 8 மாணவ, மாணவிகள், இந்திய புவி அறிவியல் ஒலிம்பியார்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், இவர்கள் பெங்களுருவில் உள்ள இந்திய புவி அறிவியல் கூட்டமைப்பு அலுவலகம் வாயிலாக, சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியார்டு போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்பார்கள். இந்த ஒலிம்பியார்டில் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இவர்கள் 1.7.2005க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இது தொடர்பான விவரங்கள் https://www.geosocindia.org/index.php/ieso என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு பெரியார் பல்கலைக்கழக புவியமைப்பியல் துறை பேராசிரியர் வெங்கடாசலபதியை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

The post சேலம் பெரியார் பல்கலையில் ஒலிம்பியார்டு நுழைவுத்தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: