திருவண்ணாமலை கம்பன் கல்லூரியில் ஆண்டு விழா

 

வேலூர், ஏப்.22: திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு 18ம் தேதி (செவ்வாய்கிழமை) நடந்தது. இவ்விழா கல்லூரி துணை தலைவர் எ.வ.குமரன் தலைமையிலும், கல்லூரி பதிவாளர் சத்தியசீலன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி வரவேற்புரையாற்றி 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசித்தார்.

இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வெள்ளித்திரை நடிகை கிருத்திகா கலந்து கொண்டு 2022-23-ம் நிதி ஆண்டில் பல்கலைக்கழக தேர்வில் முழு தேர்ச்சி (100 சதவீதம்) கொடுத்த பேராசிரியர்களுக்கு பரிசளித்தும் மற்றும் விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி மாணவிகளுக்கு ஒழுக்கம், உண்மை, நேர்மை, உழைப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவுக்கு வந்த அனைவருக்கும் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ப.கிறிஸ்டிலால் நன்றி உரையாற்றினார்.

The post திருவண்ணாமலை கம்பன் கல்லூரியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: