சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் பால் பாக்கெட்களை திருடிவந்த டிரைவர், லோடுமேன் சிக்கினர்

துரைப்பாக்க ம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் பண்ணை இயங்கி வருகிறது. இந்நிலையில், சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக பால் பாக்கெட்கள் திருடு போவதாக சோழிங்கநல்லூர் ஆவின் பால்பண்ணை துணை பொது மேலாளர் சுஜாதா செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு, சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை துணை பொது மேலாளர் சுஜாதா சந்தேகத்தின் அடிப்படையில் அங்குள்ள லாரிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது லாரி ஒன்றில் சோதனை செய்தபோது, அதில் அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட 170 பால் பாக்கெட்கள் அதிகமாக இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்தார். விசாரணையில், லாரி ஓட்டுநர் கோகுல் மற்றும் லோடுமேன் தரணி ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சுஜாதா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் பால் பாக்கெட்களை திருடிவந்த டிரைவர், லோடுமேன் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: