கன்னட மக்களை மிரட்டும் வகையில் பாஜகவுக்கு ஓட்டு போடாவிட்டால் மோடியின் ஆசீர்வாதம் கிடைக்காதா?: ஜேபி நட்டாவுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

புதுடெல்லி: பாஜகவுக்கு ஓட்டுபோடாவிட்டால் மோடியின் ஆசீர்வாதம் கிடைக்காதா? என்று ஜேபி நட்டாவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் ேபாது, ‘கர்நாடகா மாநிலத்தின் வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள். மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி அடையவேண்டுமானால் வாக்காளர்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்தை கர்நாடக மாநிலம் இழக்காமல் இருக்க வேண்டுமானால், தாமரை சின்னம் மற்றும் மாநில வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுங்கள்’ என்று பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், ‘கன்னட மக்கள் தங்களது வியர்வையாலும், ரத்தத்தாலும் மகத்தான மாநிலத்தை உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால், பிரதமரின் ஆசீர்வாதத்தை இழப்பார்கள் என்று மிரட்டுவது அவமானகரமானது. கர்நாடகாவின் எதிர்காலம், பெருமை மற்றும் செழிப்புக்காக ஒவ்வொரு கன்னட வாக்காளரும் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்’ என்று கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜேபி நட்டா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ‘பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கன்னடர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவுக்கு மோடி தேவையில்லை என்பதை தற்போது நிரூபிக்க வேண்டிய நேரம்’ என்று தெரிவித்துள்ளது.

The post கன்னட மக்களை மிரட்டும் வகையில் பாஜகவுக்கு ஓட்டு போடாவிட்டால் மோடியின் ஆசீர்வாதம் கிடைக்காதா?: ஜேபி நட்டாவுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: