ஏமனில் கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் பலி: உதவி பெறப்போன இடத்தில் பறிபோன உயிர்கள்..!!

வளைகுடா நாடான ஏமனில் நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர். ரமலான் மாதத்தை முன்னிட்டு அந்நாட்டு தலைநகர் சனாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனுடன் பணம், உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்தனர். இந்த நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்ததாக ஹவுதி தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

The post ஏமனில் கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் பலி: உதவி பெறப்போன இடத்தில் பறிபோன உயிர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: