அதானியுடன் தொடர்பு இருப்பதால் ரூ.7,000 கோடி மோசடி செய்த ஜதின் மேத்தாவை பாதுகாப்பதா?: ஒன்றிய அரசுக்கு காங். கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா னேட் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி போலவே வைர வியாபாரி ஜதின் மேத்தாவும் இந்திய வங்கிகளில் கடன் பெற்று ரூ.7000 கோடி மோசடி செய்தவர். பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டை விட்டு ஓடியது மட்டுமல்லாமல், இந்திய அரசின் ‘ஆட்சேபனை இல்லா சான்றிதழ்’ பெற்றும், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், கரீபியன் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். அவரை நாட்டிற்கு திரும்ப கொண்டுவர ஒன்றிய பாஜ அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அதானி ஊழலுக்கும், ஜதின் மேத்தாவுக்கும் நேரடி தொடர்பு இருக்கும் விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.அதானி குழுமத்திற்கு ரூ.20,000 கோடி பணம் கொடுத்த மொரீசியசை சேர்ந்த போலி நிறுவனங்களுடன் ஜதின் மேத்தாவுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. அதானியுடன் தொடர்பு இருப்பால்தான் ஒன்றிய அரசு ஜதின் மேத்தாவை பாதுகாக்கிறதா? இனியும் ஜதின் மேத்தாவை ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்குமா? ரூ.20000 கோடி பணம் யாருடையது என்பதை கண்டுபிடிக்குமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post அதானியுடன் தொடர்பு இருப்பதால் ரூ.7,000 கோடி மோசடி செய்த ஜதின் மேத்தாவை பாதுகாப்பதா?: ஒன்றிய அரசுக்கு காங். கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: