தாய்லாந்து சோங்க்ரான் நீர் திருவிழா :தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்ளும் வினோதம்!!

தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகிறது. சோங்க்ரான் நீர் திருவிழாவின் போது, பழையன கழித்துவிட்டு, புதியதை வரவேற்கும் அடையாளமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைத் தெளித்துக் கொள்கிறார்கள். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் போலவே, தாய்லாந்து மக்கள் சோங்க்ரான் திருவிழாவின் போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்வதன் மூலம், மக்கள் தங்கள் பாவங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவார்கள் என்பது தாய்லாந்து மக்களின் நம்பிக்கை ஆகும். சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும் விருந்துகளுடன் கொண்டாடப்படுகிறது.

The post தாய்லாந்து சோங்க்ரான் நீர் திருவிழா :தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்ளும் வினோதம்!! appeared first on Dinakaran.

Related Stories: