பெரியகுளம் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பு பயங்கர மோதல், கல்வீச்சு: பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதம்

,
  • பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயம்
  • 70 பேர் கைது; தென்மண்டல ஐஜி, டிஐஜி ஆய்வு

பெரியகுளம்: அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதலில் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் டாக்டர் அம்பேத்கர் 133வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இரவு கடைசி நிகழ்வாக பட்டாளம்மன் கோயில் தெரு இளைஞர்கள் மற்றும் தெ.கல்லுப்பட்டி இளைஞர்கள் அக்னிச்சட்டி மற்றும் மேள, தாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது யார் முதலில் செல்வது என்பதில் இரு தரப்புக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விழா கமிட்டியாளர்கள் வைத்திருந்த சேர் மற்றும் டூவீலர்களை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த போலீசார் இளைஞர்களை விரட்டினர்.

இதையடுத்து அவர்கள் அருகில் போலீஸ் ஸ்டேசனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் ஜீப், 108 ஆம்புலன்ஸ், பஸ் மற்றும் 15க்கும் மேற்பட்ட டூவீலர்களின் கண்ணாடிகளை உடைத்தனர். கல் வீச்சில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி உட்பட 13 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே வந்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து பெரியகுளத்தில் கடைகள் மூடப்பட்டன. போலீசார் மற்றும் போலீஸ் ஸ்டேசன் மீது கல் எறிந்தது தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார் ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

The post பெரியகுளம் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பு பயங்கர மோதல், கல்வீச்சு: பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: