93ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு: திருச்சியில் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மரியாதை

திருச்சி,ஏப்.14:தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி முன்பாக நேற்று நினைவஞ்சலி செலுத்தினர். கடந்த 1930 ம் ஆண்டு ஏப்ரல் 13 ம் தேதி ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து திருச்சி திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் இருந்து வேதாரண்யம் வரை ராஜாஜி தலைமையில் பாதயாத்திரை புறப்பட்டது. அந்த நிகழ்வின் 93 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி முன்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி அங்கு அமைந்துள்ள மகாத்மா காந்தி, காமராஜர், ராஜாஜியின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இயக்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசர், மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், பாதயாத்திரை குழு தலைவர் சக்தி செல்வ கணபதி, காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவின் மூத்த நிர்வாகி ஜிகே.முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 93ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு: திருச்சியில் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: