பூவாயம்மன் கோயில் விழா

மல்லூர், ஏப்.14: மல்லூர் வேங்காம்பட்டி பூவாயம்மன் கோயில் விழாவையொட்டி, இன்று இரவு அம்மன் கலையரங்கில் நடிகை நிக்கி கல்ராணி நட்சத்திர கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் தலைமை வகிக்கிறார். வேதவிகாஸ் பள்ளி குழுமம் முருகேசன் விழாவை துவக்கி வைக்கிறார். டாக்டர் செந்தில், யூசுப் பாட்ஷா, நடிகை நிக்கி கல்ராணி நட்சத்திர கலைநிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசுகிறார்கள். சேலம் கிழக்கு மாவட்ட திமுக. செயலாளர் சிவலிங்கம், மாவட்ட துணை செயலாளர் வக்கில் பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் உமாசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் செய்து உள்ளார்.

The post பூவாயம்மன் கோயில் விழா appeared first on Dinakaran.

Related Stories: