உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம்

திருச்சி, ஏப்.13: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் நாளை (14ம் தேதி) காலை நடக்கிறது. திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரை பெருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முதல் நாளான 6ம் தேதி கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார். 2ம் நாளில் பூதவாகனம், 3ம் நாளில் கயிலாய வாகனம், 4ம் நாளில் காமதேனு வாகனம், 5ம் நாளில் சிம்ம வாகனம், 6ம் நாளில் யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

அதனை தொடர்ந்து, 7ம் நாளான நேற்று (12ம் தேதி) பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வலம் வந்து அருள்பாலித்தார். 8ம் நாளான இன்று (13ம் தேதி) இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9ம் நாளான நாளை (14ம் தேதி) காலை 10 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணியளவில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடும் நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றியுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஞானசேகரன், தக்கார் லட்சுமணன் உள்பட கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: