பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

சிங்கம்புணரி, ஏப்.12: சிங்கம்புணரி நாடார் பேட்டையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில், பங்குனி பொங்கல் விழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. எட்டு நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று பால்குட விழா காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இதில் நந்தவனத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து பெரிய கடை வீதி வழியாக கோயிலை அடைந்தனர். அங்கு பத்திரகாளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு கட்சி அளித்தார். தொடர்ந்து மாலையில் பெண்கள் மாவிளக்கு வைத்தும், முளைப்பாரி, அக்கினி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாடார் உறவின் முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா appeared first on Dinakaran.

Related Stories: