இயற்கை அங்காடி இடுபொருள் மையம் திறப்பு

போச்சம்பள்ளி, ஏப்.12: சந்தூர் இயற்கை மாம்பழ உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின், இயற்கை அங்காடி இடுபொருள் மையம் போச்சம்பள்ளி திருவயலூரில் திறக்கப்பட்டது. மா விவசாயிகளின் நலன் கருதி, மாஞ்செடியில் பூச்சி தாக்குதல் மற்றும் செடிகள் பராமரித்தல், காய்த்தல் உள்ளிட்டவைகளில் இருந்து பாதுகாக்க தேவையான இடுபொருட்கள், நபார்டு வங்கி திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், இந்த இடுபொருள் அங்காடி மையம் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வேளாண்துறை துணை இயக்குனர் காளிமுத்து, தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி, வேளாண் அலுவலர் சோழன், உதவி வேளாண் அலுவலர் குமார், விவசாய சங்க தலைவர் கண்ணையா, மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், இயக்குனர்கள் செல்வராஜ் கல்பனா, அன்னக்கொடி, முனிரத்தினம், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதன்மை செயல் அலுவலர் பவித்ரா வரவேற்றார். கணக்காளர் கௌசல்யா நன்றி கூறினார்.

The post இயற்கை அங்காடி இடுபொருள் மையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: