ரெட்டியார்சத்திரம்காய்கறி மகத்துவ மையத்தில் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஆய்வு

நிலக்கோட்டை, ஏப். 12: ஆத்தூர் தாலுகா, ரெட்டியார்சத்திரத்தில் ஒன்றிய அரசு, இஸ்ரேல் நிதியுதவியுடன் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கறி மகத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இந்தோ- இஸ்ரேல் தூதரக அதிகாரி யாயிர் ஏசல் வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர், திறந்தவெளி மற்றும் பாதுகாக்கப்பட்ட முறைகளில் காய்கறி உற்பத்தி முறைகள் குறித்த செயல் விளக்கத்தை வழங்கினார். தொடர்ந்து அவர் காய்கறி பயிர்களை சாகுபடி செய்யவதற்கு ஏற்ற நுண்ணீர் பாசன முறை, நுண்ணீர் உரமேலாண்மை, தானியங்கி கருவிகள் செயல்பாடு, வறட்சி காலங்களில் பாதுகாப்பாக பயிர்களை சாகுபடி செய்வதற்கான உகந்த உத்திகள் போன்ற தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் மையத்தில் உற்பத்தி செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சீத்தாலட்சுமி, உதவி இயக்குனர்கள் அலெக்ஸ் ஐசக், பாண்டியராஜன், திட்ட மேலாளர்கள் பெப்பின், இளம்பரிதி மற்றும் காய்கறி மகத்துவ மைய அலுவலர்கள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ரெட்டியார்சத்திரம்

காய்கறி மகத்துவ மையத்தில் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: