காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்: 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்பயிற்சிக்கு மதிப்பெண்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டச் செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆகிய துறைகளின் மானியக் ேகாரிகை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வைகுண்டம் தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்) பேசியதாவது: ஒன்றாவது வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு உடற்பயிற்சிக்கு என தனி பாடத்தை கொண்டு வந்து அதற்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தற்போது காவல் துறையில் மட்டும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதுபோன்று அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

பட்டதாரி மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி அதிகம் உள்ளனர். அவர்கள் பயன்பெறும் வகையில் தொகுதியில் மினி ஐடி பார்க் நிறுவனத்தை நிறுவி இளைஞர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். வைகுண்டத்தில்தான் நவ திருப்பதி உள்ளது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். வைகுண்டம் அணையை முழுவதுமாக தூர் வார வேண்டும். ஏரல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தாமிரபரணி நீர் வழங்கப்படுகிறது. அந்த நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்: 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்பயிற்சிக்கு மதிப்பெண் appeared first on Dinakaran.

Related Stories: