அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அதானி குழுமத்தை ஜாமீனில் எடுக்க பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பயன்படுத்தப்படுகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச் வரையிலான காலாண்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. இதனால் டிசம்பர் வரையிலான காலாண்டில் 4.23 சதவீதமாக இருந்த பங்கு இருப்பு மார்ச் காலாண்டில் 4.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் மட்டுமின்றி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றிலும் எல்ஐசி தன் முதலீடுகளை அதிகரித்துள்ளது. எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கயைாளர்களின் நிதியை பயன்படுத்தி வீழ்ச்சி அடைந்த அதானி குழுமங்களை மீட்க கட்டாயப்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

The post அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: