ரமலான் மாதத்தில் மக்கள் கவனம் ஈர்க்கும் சிறுவன்: சூபி நடனம் ஆடி அசத்தல்

சிரியா: சிரியா நாட்டில் வசிக்கும் முஸ்லீம்கள் மத வழிபாடு நிகழ்வாக சுழன்று ஆடும் சூபி நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரமலான் மாதத்தில் இஃப்த்தார் விருந்து நிகழ்ச்சிகளில் முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் விருந்தினர்கள் முன்பு சூபி ஆடி மகிழ்விப்பார்கள் வெண்ணிற உடையணிந்து தலையில் பெரிய தொப்பியுடன் ஒரு வட்டத்தில் நின்று கொண்டிருப்பது போல் காலை நகர்த்தாமல் ஒரு கையை மேல்நோக்கி சற்று சாய்ந்தும் மற்றொரு கையை கிடைமட்டமாக வைத்தும் சுழன்று ஆடுவார்கள்.

நிமிடத்திற்கு 12 சுற்றுகளுக்கு அதிகமாக காற்றை போல் சுழல்வார்கள் அப்படி பட்ட நிகழ்ச்சி ஒன்றில் 4 வயது சிறுவன் சுழன்று ஆடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இஸ்லாமின் இறை வழியோடு தொடர்புடையது இந்த சூபி நடனம் கடவுளை தேடுவதற்கான வழியாக சூபி நடனத்தை இஸ்லாமியர்கள் பார்க்கிறார்கள். அந்த நடனத்தின் மூலம் பிராத்தனை செய்கிறார்கள். சூபி நடனத்தை பொறுத்தவரை அது மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் பிரபலம்.

Related Stories: