பெரம்பலூர் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை

பெரம்பலூர், ஏப்.11: டாக்டருக்கு படிக்காமல் கடந்த 20 வருடங்களாக வைத்தியம் பார்த்துவந்த அம்மாபாளையம் போலி டாக்டரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டிஐஜி சரவணசுந்தர் ஆகியோரது உத்தரவின் பேரில், போலி டாக்டர்களைக் கைது செய்திடும் பணி தீவிரமடைந்துள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பெரம்பலூர் போலீசார் ஒரு போலி டாக்டரைக் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், அம் மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(59). பியுசி எனப்படும் பழைய முறை எஸ்எஸ்எல்சி படிப்பு மட்டுமே படித்தவர். முறைப்படி டாக்டருக்குப் படிக்காத இவர், கடந்த 20 வருடங்களுக்கு முன், தனக்கு உணவுக் குழாய் அறுவை சிகிச்சை (ஓப்பன்சர் ஜரி)செய்து கொண்டதாகவும், அதற்கான சிகிச்சைக்காக திருச்சி உறையூர் மிஷன் மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர், ராயவேலூர் சிஎம்சி போன்ற மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சிகிச்சைக்காக சென்று வந்ததாக தெரிகிறது.

அப்போது அங்குள்ள மருத்துவர் கள் கொடுக்கும் மருந்துகளை வைத்து மருத்துவம் கற்றுக்கொண்டு, தான் டாக்டரென கூறிக்கொண்டு கடந்த 20 வருடங்களாக வீட்டிலேயே மருந்து மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு வீடு தேடி வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிகிறது இதுகுறித்து தகவலறிந்து அங்குசென்ற பெரம்பலூர் போலீசார் அன்பழகனை அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் அன்பழகனை கைதுசெய்து, அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள் மற்றும் ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

The post பெரம்பலூர் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: