சிஎம்டிஏ சார்பில் ரூ.19.98 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சிஎம்டிஏ சார்பில் ரூ.19.98 கோடியிலான புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.19.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலைப் பூங்கா, இரும்பு மற்றும் எக்கு வணிக அங்காடியில் அமைக்கப்படவுள்ள கான்கிரீட் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதேபோல, வண்டலூர், கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய புறநகர் பேருந்து முனையம் அருகில் தொல் பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலைப் பூங்கா 16.90 ஏக்கர் பரப்பளவில் ரூ.14.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சாத்தாங்காட்டில் இரும்பு மற்றும் எக்கு வணிக அங்காடியில் 4 ஏக்கர் பரப்பளவில் கனரக வாகன நிறுத்தும் இடத்தை இரண்டு பகுதிகளாக கான்கிரீட் சாலையாக ரூ.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

The post சிஎம்டிஏ சார்பில் ரூ.19.98 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: