10 போலி மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்கள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி, மருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளித்து வந்தது தொடர்பாக நன்னிலம் தாலுகா மாப்பிள்ளை குப்பம் செந்தில் (37), கொல்லுமாங்குடி சிவகுமார் (56), பூந்தோட்டம் மாரியப்பன் (52). முத்துப்பேட்டை கல்யாணசுந்தரம் (62), இடும்பாவனம் ராஜேந்திரன் (56), பெருக வாழ்ந்தான் சிவகுருநாதன் (72), எடையூர் சிவசுப்பிரமணியன் (55), கோட்டூர் துரைராஜ் (62), திருத்துறைப்பூண்டி பண்ணையப்பன் (52), கூத்தாநல்லூர் செளரிராஜ் (38) ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நாகூர்: நாகூரில் மருத்துவ குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தர்கா அருகே லிங்கம் மெடிக்கலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் அங்கு சென்ற போலீசார், மெடிக்கல் உரிமையாளர் கார்த்திகேயனை (52) கைது செய்தனர்.

The post 10 போலி மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: