மிர்பூர்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 2ம் நாள் முடிவில் 27 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்திருந்தது. 2ம் நாளான நேற்று அந்த அணி முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்து ஆட்டமிழந்தது. முஷ்பிகுர் ரகிம் 126 ரன் (166 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 87, லிட்டன் தாஸ் 43, மெஹிதி ஹசன் மிராஸ் 55 ரன் விளாசினர்.
அயர்லாந்து பந்துவீச்சில் பால்பிர்னி 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மார்க் அடேர், பென் ஒயிட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து, 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்துள்ளது. டெக்டர் 8, பீட்டர் மூர் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 128 ரன் தேவை என்ற நெருக்கடியுடன் அயர்லாந்து இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.
The post வங்கதேசம் வலுவான முன்னிலை இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் அயர்லாந்து appeared first on Dinakaran.