ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2500 கிலோ ரேஷன் அரிசி மினிவேனுடன் பறிமுதல்: 3 பேர் கைது

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனை சாவடி அருகே நேற்று மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், போலீஸ் எஸ்பி ஸ்டாலின் மேற்பார்வையில், டிஎஸ்பி ஜான்சுந்தர் தலைமையில், திருவள்ளூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் மொத்தம் 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ரேஷன் அரிசியை தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரேஷன் அரிசியை கடத்தியது சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்த சந்திரசேகர் (32), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா உஷ்லம்குளம் கிராமத்தை சேர்ந்த வரதராஜபெருமாள் (30), கீரந்தை கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வீரப்பெருமாள் (33) ஆகியோர் என தெரியவந்தது. பிறகு போலீசார் 3 பேரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்….

The post ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2500 கிலோ ரேஷன் அரிசி மினிவேனுடன் பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: