×

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம், மார்ச் 28: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவானது சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 83-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்றிலிருந்து தொடர்ந்து 10 நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதல் நிகழ்வாக நேற்று காப்பு கட்டு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து வருகிற ஏப்.5ம் தேதி பூக்குழி மற்றும் பால்குடம் உள்ளிட்ட நிகழ்வு நடைபெற உள்ளது.இதுபோன்று முதுகுளத்தூர் சுப்ரமணியர் கோயிலில் கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் முன்னிலையில் கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தது.மேலும் மேலக்கொடுமலூர் குமரன் கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு காப்பு கட்டி விழா துவங்கப்பட்டது. அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரம் முதல் நாள் கொடியேற்றம், காப்பு கட்டுதலை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Tags : Panguni Uthra Festival Flag ,Lavidhu Murugan Temple ,
× RELATED முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்