பரமக்குடி, மார்ச் 28: பரமக்குடியில் புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை ஐகோர்ட் தலைமை நீதிபதி திறந்து வைத்தார். பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் பழமை வாய்ந்த நீதிமன்ற கட்டிடம் உள்ளது. அது புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜா(பொ) தலைமை தாங்கி திறந்து வைத்தார். நீதிபதிகள் கிருஷ்ணகுமார், மதி, தண்டபாணி, கிருஷ்ணன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா வரவேற்றார்.
இதில் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி சாந்தி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாண்டி மகாராஜா, சார்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.பரமக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் கந்தசாமி, செயலாளர் பசுமலை, பொருளாளர் பிரபு உள்ளிட்டோர் தலைமை நீதிபதிக்கு ராமர் பட்டாபிஷேக சிலையை நினைவு பரிசாக வழங்கினர். பின்பு நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முதன்மை தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா நன்றி கூறினார்.