ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1200 கனஅடி

மேட்டூர், மார்ச் 28: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக நீடித்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 1,200 கனஅடியாக சரிந்துள்ளது. அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,248 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,260 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 103.03 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 102.99 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 68.77 டி.எம்.சியாக உள்ளது.

Related Stories: