நடைபாதை ஆக்கிரமிப்பு தடுக்க கல் தூண் தடுப்புகள்

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சி சாலைகளை மேம்படுத்துவதற்கும், சாலை, வடிகால், விளக்குகள், குளம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், 2023-24ம் நிதியாண்டில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78.01 கிமீ நீளத்திற்கு ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரூ.149 கோடி மதிப்பீட்டில் 251.11 கி.மீ., நீளத்திற்கு 1335 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகரில் 425.51 கி.மீ., 2687 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் மேம்படுத்தும் பணிகள் 327.63 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்புதிய சாலை திட்டத்தில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு மற்றும் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சாத்திய கூறுகளின் அடிப்படையில் கல் தூண் தடுப்புகள் அமைக்கப்படும்.

2023-24ம் நிதியாண்டில் 10,939 எண்ணிக்கையிலான பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளின் உடைந்த மற்றும் பொலிவிழந்த தெரு பெயர் பலகைகள் குடியிருப்போர் நலச் சங்கம், நமக்கு நாமே திட்டம் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோரது பங்களிப்பின் மூலம் சீரமைக்கப்படும், என மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: