₹11.45 கோடி வரிபாக்கி விழுப்புரம் நகராட்சியில் 711 பேருக்கு ஜப்தி நோட்டீஸ்

விழுப்புரம், மார்ச் 28:விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே சொத்து வரி, தொழில் வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு ஆகியவற்றின் மூலம் நகரின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே விழுப்புரம் நகராட்சியில் சொத்துவரி ரூ.6 கோடியும், குடிநீர் கட்டணம் ரூ.1.94 கோடியும், பாதாள சாக்கடை கட்டணம் ரூ.1.28 கோடியும் என ரூ.11.45 கோடி விழுப்புரம் நகராட்சிக்கு வரி நிலுவையாக உள்ளது.

இதனை வசூலிக்க தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் மாத இறுதிக்குள் இந்த வரியை கட்டி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ஜப்தி, நீதிமன்றத்தின் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து வந்தனர். நகராட்சி நிர்வாகம் அறிவுறுதியபிறகும் பலர் வரிபாக்கியை செலுத்தாததால் பலகோடி வரி நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம்,  நிலுவைதாரர்களுக்கு தற்போது ஜப்தி மற்றும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 711 பேருக்கு  ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே நிலுவைதாரர்கள் முன்வந்து வரிபாக்கியை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.

Related Stories: