வீடு புகுந்து தாக்குதல்

சிவகாசி, பிப்.5: வீடு புகுந்து பட்டாசு தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே பூவநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி முனியாண்டி(28). இவருக்கும் எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தை சேர்ந்த அழகர்சாமி(25) என்ற வாலிபருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

சம்பவத்தன்று முனியாண்டி தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அழகர்சாமி, முனியாண்டி மற்றும் அவரது மனைவி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்தனர்.

 

Related Stories: