×

ஆற்றில் மீன் பிடிப்பதில் பொதுமக்கள் தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சேந்தனேந்தல் ஆற்றுப்படுக்கையில் மீன்களை தடவி பிடிப்பதில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைகரை ஆறு கிழக்கு கடற்கரை சாலையை கடந்து சேந்தனேந்தலுக்கும் காரங் காட்டிற்கும் இடையில் கடலை சென்றடைகிறது. இந்த கடலில் இருந்து 3 கி.மீ தூரம் வரை கடல் மற்றும் ஆற்று தண்ணீரும் நிறைந்துள்ளது. இந்த பகுதியில் சேந்தனேந்தல், கண்ணாரேந்தல், மொச்சியேந்தல் மற்றும் புதுக்காடு வெட்டுக்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் இந்த ஆற்றில் உள்ள மீன், இரால், நண்டு உள்ளிட்டவற்றை தடவி பிடித்து தங்களது வீட்டில் குழம்பு வைப்பதற்கும், மீச்சம் இருப்பதை விற்பனை செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மீன் பிடித்தல் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு வேட்டையாடும் தொழில் போல் உள்ளது. இதனால் பெண்கள் உற்சாகமாக தடவி மீன் பிடிப்பதில் ஆர்வகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்களும் வலைகளை போட்டு மீன்களை பிடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி மீன்பிடித்து வருகின்றனர்.
Tags :
× RELATED சென்னையில் பதற்றமான...