×

சப்.ஜூனியர் மண்டல போட்டி ஹாக்கி சங்க பொதுச்செயலாளர் தகவல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் தென்மாநிலங்கள் அளவிலான போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அந்தமான் நிகோபார்தீவு ஆகிய தென்மாநிலங்கள் கலந்து கொண்ட தென்மண்டல சாம்பியன்ஷிப் போட்டி 19ம் தேதி துவங்கியது. 18 வயதிற்குட்பட்ட ஆண்,பெண் ஜூனியர் பிரிவுக்கு மட்டும் நடத்தப்பட்டது. இதில் 7 ஆண்கள் அணி, 7 மகளிர் அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டி நேற்று நிறைவு பெற்றது.

ராமநாதபுரத்தில் மாநில பொதுச்செயலாளர் செந்தில் ராஜ்குமார் கூறும்போது, ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் தேர்வாளர்களால் 30 வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தந்த மண்டலங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த வீரர்களுக்கு 30 முதல் 45 நாட்கள் முகாம் நடத்தி பயிற்சி அளிக்கப்படும். மேலும் இந்த 4 மண்டல அணிகள் மற்றும் 2 ஹாக்கி அகாடமி அணிகள் மண்டலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும். இப்போட்டியில் இருந்து ஹாக்கி இந்தியா தேர்வாளர்கள் 45 திறமையான வீரர்களை தேர்ந்தெடுக்கும். இதிலிருந்து திறமையான வீரர்களைக் கண்டறிவதற்காக அவ்வப்போது முகாம்கள் நடத்தப்படும். இந்த மண்டல சாம்பியன்ஷிப் போட்டிகள் இளம் விளையாட்டு வீரர்களுக்கு திறமையை வெளிப்படுத்தவும், எதிர்கால நட்சத்திரங்களாக மாறவும் வாய்ப்பை வழங்கும். இதேபோல் ஹாக்கி இந்தியா, நாட்டில் முதன் முறையாக சப்-ஜூனியர் அளவிலும் மண்டல அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த உள்ளது என்றார்.Tags : Sub.Junior Regional Competition Hockey Association ,
× RELATED சென்னையில் பதற்றமான...