×

ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்பு காங்கிரஸ் அறப்போராட்டம்

ராமநாதபுரம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யபட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாக்கிரக அறப்போராட்டம் நடந்தது. அரண்மனை முன்பாக நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மலேசிய பாண்டியன் தலைமையும், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேலுச்சாமி முன்னிலையும் வகித்தனர்.காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரைக் கண்ணன், மகிளா காங்கிரஸ் பெமிலா விஜயகுமார், ராமலட்சுமி, வட்டார தலைவர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags : Rahul Gandhi ,Congress ,
× RELATED சொல்லிட்டாங்க…