திருமழிசை ஒத்தாண்டேஸ்வேரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது

திருவள்ளூர், மார்ச் 27: பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமைந்துள்ளது குளிர்ந்த  நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வேரர் கோவில். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 13 நாட்கள் நடைபெறுகிறது.  இந்தப் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முன்னதாக  25 ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளிய பிறகு தேரோட்டம் நடைபெறும். பிறகு அன்று மாலை 5 மணிக்கு சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளுதலும், இரவு 8 மணிக்கு  மேல்  வசந்த மண்டபத்திலிருந்து கோவிலுக்கு எழுந்தருளுதலும் நடைபெறுகிறது.

அதன்படி 26ம் தேதி காலை கொடியேற்றமும், மாலை சிறிய மங்களகிரி உற்சவமும் நடைபெற்றது. இன்று 27ம் தேதி காலை சூரிய விருத்தமும், மாலை சந்திர விருத்தமும், 28ம் தேதி காலை மங்கள கிரி உற்சவமும், மாலை சிம்மவாகன உற்சவமும், 29ம் தேதி காலை சிவிகை உற்சவமும், மாலை நாக வாகன உற்சவமும், 30ம் தேதி காலை ஸ்ரீஅதிகார நந்தி சேவையும், மாலை ரஷப வாகன சேவையும், 31ம் தேதி காலை தொட்ட உற்சவமும், மாலை யானை வாகன உற்சவமும் நடைபெறுகிறது.  அதே போல் ஏப்ரல் 1ம் தேதி காலை தேரோட்டமும்,  2ம் தேதி மாலை ஊணாங்கொடி சேவையும், இரவு குதிரை வாகன உற்சவமும், 3ம் தேதி காலை சிவிகை உற்சவமும், மாலை விமான உற்சவமும், 4ம் தேதி காலை ஸ்ரீநடராஜர் தரிசனமும்,

பகல் தீர்த்தம் கொட்டி உற்சவமும், மாலை திருக்கல்யாணமும், இரவு ஸ்ரீபஞ்சமூர்த்திகள் உற்சவமும், இரவு ஸ்ரீசண்டேஸ்வரர் உற்சவமும், 5ம் தேதி இரவு தெப்ப உற்சவமும், ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், 6ம் தேதி காலை  உமாமகேஸ்வரர் தரிசனமும், இரவு தெப்ப உற்சவமும், ஸ்ரீ சந்திரசேகர் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், 7ம் தேதி இரவு

தெப்ப உற்சவமும் ஸ்ரீசுப்பிரமணியர் எழுந்தருளுதல் மற்றும் ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் ஆஸ்தானப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகின்றனர்.

Related Stories: