கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சாலைகள், தெருக்களில் பல நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், சென்னை மாநகர காவல் எல்லையில் நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, முக்கிய சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்கள், உட்புற சாலைகளில் நிறுத்தப்பட்ட 2 வாகனங்கள் என மொத்தம் 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகன பதிவு எண்களை வைத்து போலீசார் வாகன உரிமையாளர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 22 வாகனங்களின் உரிமையாளர்களை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து வாகனங்களை ஒப்படைத்தனர். மீதமுள்ள 10 வாகனங்கள் பதிவு எண்கள் தவறாக இருப்பதால், வாகனத்தின் உரிமையாளர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே 10 வாகனங்கள் மீது போலீசார் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: