ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது

திருச்சி: திருச்சி மற்றும் தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று விமானம் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் மூலம் திருச்சி வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்து பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதற்காக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசும் 200 ரூபாய் மானியம் உஜாலா திட்டத்தின் மூலம் உயர்த்தியுள்ளது. இது ஆரோக்கியமான விஷயம் தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்து கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே புதுச்சேரியில் அதனை செயல்படுத்தி மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க தொடங்கி விட்டார்கள். பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 50ஆயிரம் ரூபாய் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற பல நல்ல திட்டங்களை புதுச்சேரி அரசு நிறைவேற்றிக் கொண்டுள்ளது. பிரதமர் கூறியது போல பெஸ்ட் புதுச்சேரியாக அதனை கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விவகாரம் சட்டரீதியாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர்க்கும் உள்ள விவகாரம் அதில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றார்.

Related Stories: