தரகம்பட்டி அருகே வேப்பங்குடியில் இலவச மருத்துவ முகாம்

தோகைமலை : தரகம்பட்டி அருகே வரவனை ஊராட்சி மற்றும் பசுமைகுடி தன்னார்வ இயக்கம் சார்பாக நடந்த இலவச மருத்துவ முகாமில் 755 பேர்சிகிச்சை பெற்றனர் கரூர்மாவட்டம் தரகம்பட்டி அருகே வரவனை ஊராட்சி சார்பாக பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.  வரவனை வேப்பங்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை வரவனை ஊராட்சி மன்ற தலைவர்கந்தசாமி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர்தருமராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்ஜெரால்டு ஆரோக்கியராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர்மோகன்குமார்ஆகியோர்முன்னிலை வகித்தனர் இதில் வரவனை ஊராட்சி கிராமங்களில் இருந்து வந்த 755 பேருக்கு கரூர்தனியார்மருத்துவ மனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, எச்.ஐ.வி, கொழுப்பின் அளவு, ஈ.சி.ஜி, ஸ்கேன், சளி, இருதய நோய் கண்டறிதல், கர்ப்பபை வாய் புற்றுநோய், கண்புரை உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் பசுமைக்குடி இயக்கத்தின் ஆலோசகர்நரேந்திரன் கந்தசாமி, ஊராட்சி மன்ற செயலாளர்வீராச்சாமி, பசுமைக்குடி தன்னார்வலர்கள் கவிநேசன், காளிமுத்து, கருப்பையா, வேல்முருகன் உள்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Related Stories: