லாட்டரி விற்பனை : 3 பேர் கைது

ஈரோடு, மார்ச் 27:  ஈரோடு வடக்கு மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஈரோடு வடக்கு போலீசார், 16ம் நம்பர் ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சூரியம் பாளையம் பகுதியைச் சேந்த நல்லசாமி (42) என்பவர் வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை வைத்து பொது மக்களை ஏமாற்றி போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 20 போலி லாட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, கருங்கல்பாளையம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கமலா நகர் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் (43) என்பவர் பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 7 வெளி மாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, நெரிகல் மேடு பகுதியிலும் கருங்கல்பாளையம் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில், சூளை பகுதியை சேர்ந்த வினோத் (35), அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 9 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: