.பழூர் அரசு பள்ளியில் விடுமுறையில் ஆர்வமுடன் வந்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா. பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுமுறை நாட்களிலும் ஆர்வமுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தும் வகையில் இது அமையும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர். அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் குணசேகரனால் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.இதில் இடைநின்ற மாணவர்களையும் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தேர்வு முடியும் வரை இடைப்பட்ட விடுமுறை நாட்களில் சிறப்பு கவனம் கொண்டு படிப்புடன் தொடர்புபடுத்தி மாணவர்களை தயார் செய்வதன் மூலம் தேர்ச்சி விழுக்காடு உயரும். மேலும் விடுமுறை நாட்களில் கவனம் சிதறுவது தடுக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகும் நேரங்களில் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு வகுப்புகள் மூலம் கவனம் சிதறாமல் தேர்வுக்கு நன்கு தயாராக முடிகிறது என மாணவர்கள் ஆர்வம் கலந்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Related Stories: