90 பேருக்கு வழங்கல் விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட்

நாகப்பட்டினம்: சிவசேனா கட்சி மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை அரசு மேம்படுத்த வேண்டும். சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கருத்துக்கள் சொல்ல உரிமை உள்ளது. அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நாகை மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. மீன்பிடித்தொழிலை தவிர வேறு எதுவும் இல்லாததால், மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை உருவாகி உள்ளது.

எனவே தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடி மாதம் கோயில்களில் கூழ் ஊற்றும் வகையில், அதற்கு தேவையான அரிசி, கேள்விரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும். இதுகுறித்து சிவசேனா கட்சி சார்பில் இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாட்டில் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். நாகையில் நம்பிக்கை என்ற குழந்தைகள் காப்பகம் தொடர்பான பிரச்னையில் அந்நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: