டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர், மார்ச் 26: திருவள்ளுர் அடுத்த பட்டரைப்பெரும்புதூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர்  கயல்விழி தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கிரிராஜன், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்ற சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அதே போல் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வழக்கறிஞர்களின் கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ₹7 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். பார் கவுன்சிலுக்கு மூலதனம் வைப்பு தொகையை ₹20 கோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கி தந்துள்ளார்.  

இந்தியாவிலேயே எந்த மாநிலமும் ஒதுக்காத அளவில் கல்வி வளர்ச்சிக்காக கடந்த நிதிநிலை அறிக்கையில் ₹28 ஆயிரம் கோடியை தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கினார். ஆனால் இந்த முறை நிதிநிலை அறிக்கையில் ₹40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.  மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக மருத்துவத்துறை, பொறியியல் துறை, பொருளாதார துறை என அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக முன்னுரிமை அளித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நலத்திட்டங்கள் மூலம் மாணவர்கள் தங்களின் கல்வியையும், தகுதியையும், தரத்தையும் வளர்த்துக்கொண்டு வல்லுநர்களாக சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.  இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியின் பரிசளிப்பு விழாவில் தேசிய அளவில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்ற சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர்ளுக்கும், இரண்டாம் பரிசு பெற்ற வேலூர் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழஙகி பாராட்டினார். இவ்விழாவில் மாவட்ட அரசு வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி, கூடுதல் அரசு வழக்கறிஞர் சி.ரவிச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள், சட்டக்கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: