திருமணம் செய்வதாக சிறுமி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி, மார்ச் 26: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது  செய்யப்பட்டார். அயப்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, 11ம் வகுப்பு  வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 19ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி,  இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சதிஷ் பாபு (24) என்பவர், சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும்  நேற்று முன்தினம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து,  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: