பணம் கேட்டு தொழிலாளியை வெட்டிய பிரபல ரவுடி சிக்கினார்

பெரியபாளையம், மார்ச் 26: பணம் கேட்டு கூலித்தொழிலாளியை வெட்டிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே ஆரணி, சேர்ப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவா (57), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 23ம் தேதி ஆரணி பேருந்து நிலையத்தில் இருந்து சிவா, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (எ) மக்கா ரவி (30), சிவாவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அவர், பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவி, கத்தியால் சிவா தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியை தீவிரமாக தேடி வந்தனர்.ஆரணி பேருந்து நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த ரவியை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் சரித்திரபதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

Related Stories: