முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் திமுக தெருமுனை கூட்டம்: அமைச்சர் நாசர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டையில் திமுக தலைவர் பிறந்தநாள் விழவை முன்னிட்டு  தெருமுனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கி.வே ஆனந்தகுமார் ஏற்பாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தெருமுனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கேவிஜி உமாமகேஸ்வரி, ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி, நமச்சிவாயம், சுரேஷ்குமார், துர்கா வெங்கடேசன்,  புருஷோத்தமன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி. ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ் சாதிக், சரத்பாலா ஆகியோர் திமுக ஆட்சியில் கொண்டு வந்த சாதனைகளைப் பற்றி விளக்கமாக பேசினர். இதில், சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டார். அமைச்சர் பேசுகையில், தமிழக வரலாற்றில் இந்த பட்ஜெட் வரலாற்று மிக்க சாதனைகளை படைத்துள்ளது. பெண்களுக்கான உரிமைத் தொகையை செப்டம்பர் மாதம் வழங்கும் திட்டமும், வேளாண் துறை பல்வேறு திட்டங்களை அறிவித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கும் சிறப்பான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பற்றி விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் துணை செயலாளர் அன்புவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் முர்த்தி, பொதுகுழு உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் மணிபாலன், பரிமளம்,  பேருர் செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய துணை செயலாளர் கே. ஈ. திருமலை நன்றி  உரையாற்றினார்.

Related Stories: