ஜாக்டோ ஜியோ போராட்டம்

பொன்னேரி: தமிழ்நாட்டில் அரசு துறைகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது தமிழக அரசு.  இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை என தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொன்னேரி உலகநாதன் சாமி கல்லூரி நுழைவாயில் முன்பு  நேற்று மாலை அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதனை தொடர்ந்து மனித சங்கிலி போராட்டத்திலும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பேனர்கள் மற்றும் கையில் பதாகைகளை ஏந்தியும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால், பொன்னேரி -திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி, பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: