விருப்பம் உள்ளவர்கள் சேர அழைப்பு சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

மணப்பாறை: மணப்பாறையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை கூட்டு பண்ணை உழவர் உற்பத்தியாளர், ஜெசிஐ மணப்பாறை டவுன் நிறுவனம் இணைந்து நடத்திய உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் மணப்பாறை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவராம கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில் ஜெசிஐ மணப்பாறை கிருஷ்ண கோபால், ரவி,கதிர்வேல், விஐயராஜ், மண்டல இயக்குனர் அருள்முருகன், மண்டல இயக்குனர் குரு பிரபாகரன்,பிரவீன், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மணப்பாறை கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.

Related Stories: